சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக்கிறைத்த நீர்; அழகூர்.  அருண்.   ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

பொன்னாடாய்   நம்நாடும்   பொலிவுற்று   விளக்கமுற
என்னாடு   துணிவுறுமாம்   எதிர்நிற்க ? ---- என்றென்றும்
நல்லோரைத்   தேர்ந்திட்டு   நாடாளக்   காண்பதன்றோ
நெல்லுக்கு   இறைக்கின்ற   நீர் ?

ஒருமுகமாய்   நாட்டுமக்கள்   உத்தமரைத்   தேராக்கால்
சிறப்பற்று   நாடிதுவும்   சீரழியும் ! ---- பொறுப்பற்று
கல்லாரைத்   தேராதீர்  !   காலத்தில்   உணர்ந்திடுவீர் !
நெல்லுக்கே   இறைத்திடுவீர்   நீர் !

செல்லாதக்   காசுக்குச்   சிறப்பில்லை ,   பெருமையில்லை ;
பொல்லாதார்   ஆட்சியெனப்   புனர்வாழ்வும்  ---- இல்லையாம் !
நல்லதுவோ   விழலுக்கு    நாமிறைத்து   ஓய்வதுவும் ?
நெல்லுக்கே   இறைத்திடுவீர்   நீர் !

சொல்லிவந்த   தனைமறந்து   சுகமதனைப்   பெற்றுய்யும்
பொல்லார்க்கு   வாக்குதனைப்   போட்டோமே ! ---- நல்லதுவோ ?
அல்லலையேக்   காண்கின்றோம் !   அவலமதே   பரிசாச்சே !
நெல்லுக்கோ   இறைத்திட்டோம்   நீர் ?

வீடெல்லாம்   மாட்சிகண்டு   விளக்கமுறும்  கல்விபெற ,
நாடிதனின்   புகழ்பரவும்   நாற்திசையும் ! ----நாடெங்கும்
கல்விதரும்   சாலைகளை   கணக்கற்றுப்   பெருக்குவதே
நெல்லுக்கு   இறைக்கின்ற   நீர் !

அல்லும்   பகலுமென   அயராமல்   சலிக்காமல்
கல்விதனைக்   கற்றுக்   கரைதேர, ---- நல்விதமாய்
செல்வவளம்   பெருகிவரும் ;  சீர்பெறுவோம் !   இதுவன்றோ
நெல்லுக்கு   இறைக்கின்ற   நீர் !

நெல்லுக்கு   இறைக்கும்நீர்   தவறாமல்   நமக்கெல்லாம்
                   நிச்சயம்   பலனைத்   தரும் ;
          நிலமகள்   பொய்க்காமல்   வளமதனை   ஊட்டுவாள்
                   நெஞ்சமதும்   மகிழச்   செய்வாள் !
அல்லும்   பகலுமாய்   சளைக்காமல்   ஏர்வுழவர்
                   அனுதினமும்   நீர்   இறைக்க ,
           அளப்பரிய   விளைச்சல்தனை   நிலமகள்   தந்திட்டு
                    அருளுவாள்   அவர்கட்க்  கெல்லாம்  !
புல்லதுவும்   செழித்தோங்கி   வளருமாம் ; இதுயிறைவன்
                    பொதுவான   கருணை   அன்றோ ?
           போற்றிடத்   தக்கதே   அன்னவனின்   செய்கையும் ,
                    பொறாமைக்கு   இடமும்   உண்டோ ?
செல்வமதை   வாரியே   வழங்கிடும்   பெருமைதனை
                    சிறப்பிக்கும்   வகையில்   தானே ,
           செங்கரும்   போடுநல்   இனிக்கின்றப்   பொங்கல்தனை
                     சிரத்தையுடன்   படைப்ப   தெல்லாம்  !               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.